டாடா நிறுவனம் தனது டிகோர் (Tigor EV) வகை மின்சார காரை மேம்படுத்தி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த கார்கள் 4 மாறுபட்ட வகைகளில் கிடைக்கும் நிலையில் நெக்ஸன் ப்ரைம் வகை காரை இலவசமாக டிகோரின் தரத்திற்கு மேம்படுத்தி தருவதாகவும் டாடா அறிவித்துள்ளது. .
மழையில் தானாக இயங்கும் வைபர், ஸ்மார்ட் வாட்ச் மூலமாக கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட வசதிகள் உள்ளதாகவும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர் வரையில் இயக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திலேயே இந்த கார் 20 ஆயிரம் முன்பதிவுகளை பெற்றுள்ளதாக டாடா தெரிவித்துள்ளது.