மேகாலயா - அசாம் மாநில எல்லையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் வனத்துறை அதிகாரி உள்பட 6 பேர் உயிரிழந்த நிலையில், மேகாலயாவின் 7 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை மாநில எல்லையில், அசாம் வனத்துறையினருக்கும், மேகாலயாவின் Mukroh கிராமவாசிகளுக்கும் இடையே மோதல் மூண்ட நிலையில், அசாம் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அதில் மேகாலயாவை சேர்ந்த 5பேரும், அசாம் வனத்துறை அதிகாரி ஒருவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், மேகாலயாவின் 7 மாவட்டங்களில், காலை 10.30 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டது.