பிரிட்டன் மீனவர் ஒருவர் வீசிய தூண்டிலில் 30 கிலோ ராட்சத கோல்டுபிஷ் சிக்கியது.
கெண்டை மீனுக்கும், அலங்கார கொய் மீனுக்கும் ஏற்பட்ட கலப்பால் உருவான இந்த மீன் கேரட் என அழைக்கப்படுகிறது.
பிரான்ஸின் ஷாம்பெய்ன் பிராந்தியத்திலுள்ள மீன்பிடி ஏரியில், ஆண்டி ஹாகெட் என்ற மீனவரின் தூண்டிலில் இந்த ராட்சத மீன் சிக்கியுள்ளது.
தூண்டிலை கவ்வியபடியே சுமார் நூறடி தூரம் சென்ற மீனை, 25 நிமிடங்கள் போராடி ஹாகெட் பிடித்துள்ளார்.
முப்பது கிலோ மீனுடன் போஸ் கொடுத்தபின் அதனை ஏரியில் அவர் விட்டுவிட்டார்.