கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பீப்பாய்கள் வரை அதிகரிப்பது தொடர்பாக டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என அறிவித்ததையடுத்து கச்சா எண்ணெய் விலை சரிந்தது.
ஜனவரி மாதத்திற்கான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.41 டாலர் குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு 86.21 டாலராக இருந்தது.
அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் டிசம்பர் மாத விற்பனையில் 78.39 டாலராகக் குறைந்தது