வடகிழக்கு சிரியாவில் துருக்கியின் எல்லைப் பகுதியில் அங்காரா மற்றும் குர்திஷ் போராளிகள் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு பதிலடியாக, துருக்கியின் தரைப் படைகள் சிரியாவில் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் இருந்து நாடு திரும்பிய அதிபர் ((ரெசெப் தையிப் ))எர்டோகன், துருக்கியின் வான்வழி தாக்குதலுடன், தரைப்படைகளும் சிரியாவை தாக்கும் என்றும், எல்லை மீறுபவர்களுக்கு பதிலடி நிச்சயம் உண்டு என்றும் தெரிவித்தார்.
கடந்த வாரம் வடக்கு சிரியாவில் குர்திஷ் போராளிகள் நடத்திய தாக்குதலில், 31 பேர் கொல்லப்பட்டனர்.