கெர்சனில் உள்ள அருங்காட்சியத்தில் விலைமதிப்பற்ற கலைப்பொக்கிஷங்களை ரஷ்யா கொள்ளையடித்துச் சென்றதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பேசிய உக்ரைனின் கலாச்சார அமைச்சர் ஒலெக்சாண்டர் தாச்சென்கோ, உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறுவதற்கு முன்னதாக கெர்சனின் 2 கலை அருங்காட்சியத்தில் இருந்து 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த விலையுயர்ந்த ஓவியங்கள்,பழங்கால நாணயங்கள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்களை ரஷ்யப் படைகள் சூறையாடி கிரிமியாவிற்கு கொண்டு சென்றதாகத் தெரிவித்தார்.