சென்னை அமைந்தகரை மேம்பாலத்தின் மீது அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் ட்ரிபிள்ஸ் சென்றபோது நேரிட்ட விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முகப்பேரில் வீடெடுத்து தங்கி, தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த 3 மாணவர்கள், அதிகாலை இருசக்கர வாகனத்தில் கோவளம் கடற்கரைக்கு சென்று சூர்யோதயத்தை ரசித்துவிட்டு அமைந்தகரை மேம்பாலம் வழியாக வேகமாக வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
அப்போது,கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் மேம்பால சுவரின் மீது மோதியதில், வாகனத்தை ஓட்டி வந்த ஆலன் ஜெர்மான்ஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னால் அமர்ந்திருந்த இரு படுகாயத்துடன், மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.