சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்குவது போல நடித்த 2 பேரிடம் சோதனை நடத்தி, 2 உலோக சாமி சிலைகளை காவல்துறையினர் மீட்டனர்.
சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் போலீசார் விசாரித்தபோது, திடீரென ஒருவர் தப்பியோடினார்.
இதையடுத்து இன்னொரு நபரிடம் சோதனை நடத்தியதில் 2 சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
பிடிபட்ட நபர் தஞ்சாவூரை சேர்ந்த சுதாகர் என்பதும், தப்பியோடியவர் கும்பகோணத்தைச் சேர்ந்த தினேஷ் என்பதும் , லால்குடி பெண் ஒருவர் சிலைகளை கொடுத்து, சென்னையில் உள்ள ஒரு நபரிடம் அளித்து 3 லட்சம் ரூபாய் வாங்கி வரும்படி கூறியதும் கண்டுபிடிக்கப்பட்டது.