இலங்கை தலைநகர் கொழும்புவில் மீண்டும் அரசுக்கு எதிராக, நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்த மாணவர் அமைப்பின் தலைவர்கள் 2 பேரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் 90 நாட்கள் சிறையில் அடைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டார்.
அந்த உத்தரவு வியாழக்கிழமையோடு முடிவடைந்த நிலையில், அவர்களை விடுவிக்கக் கோரி நேற்று மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடித்தனர்.