மேற்கு இந்தோனேசியாவின் கடற்கரையில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுமத்ராவின் பெங்குலு நகருக்கு தென்மேற்கே 155 கிலோ மீட்டர் தொலைவில் ((Enggano)) எங்கானோ என்ற சிறிய தீவுக்கு அருகில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம், இரவு 8 முதல் 9 மணிக்கு இடையே ரிக்டர் அளவில் 6.9 மற்றும் 5.4 ஆக இருமுறை பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.