சென்னையில், 100 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக கணவன் - மனைவி கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த உமர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், தனது நிறுவனத்தை மேம்படுத்த வேண்டி கடன் பெற முயற்சித்த போது, கே.கே.நகரைச் சேர்ந்த ஜெயசீலன் மற்றும் அவரது மனைவி ராமலெட்சுமி ஆகியோர் அணுகி ஸ்ரீபாலாஜி டிரேடர்ஸ் என்ற பெரிய நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்றும், கடன் வாங்கித் தருவதாக கூறி அதற்கான பிராசசிங் பீஸ் மற்றும் டாக்குமெண்ட் சார்ஜ் என 50 லட்ச ரூபாய் வரை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிந்து தேடிவந்த போலீசார், திருநெல்வேலியில் தலைமறைவாக இருந்த கணவன் - மனைவியை கைது செய்தனர்.