சென்னை எம்.ஜி.ஆர் சென்டரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் பிரிவின் நுழைவுவாயிலில் சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் பையுடன் சுற்றி வந்த பயணியிடம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் வேலூரைச் சேர்ந்த ஜெகன் சீனிவாசன் என்பதும், உரிய ஆவணம் இன்றி 403 கிராம் தங்கம் மற்றும் 407 கிராம் வெள்ளி பொருட்கள் வைத்திருப்பதும் தெரிய வந்தது.
அதுபோல் மற்றொரு பயணியான குடியாத்தம் ஜீவாவிடம் இருந்து 305 கிராம் தங்கம் மற்றும் 212 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.