கர்நாடகாவில் நடைபெற்ற திருமண வரன் பார்க்கும் நிகழ்வில், 230 பெண்களை வரன் பார்க்க, 14,000 மணமகன்கள் குவிந்தனர்.
மண்டியா மாவட்டத்தில் உள்ள ஆதிசுஞ்னகிரி மடத்தின் சார்பில் கல்யாண வரன் பார்க்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் சுமார் 230 பெண்கள், மணமகன் தேவை என பதிவு செய்திருந்த நிலையில், நிகழ்ச்சி தொடங்கியதும் ஏராளமானோர் அங்கு கூடினர்.
அதிலும், 230 பெண்களை மணக்க 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விருப்பம் தெரிவித்து, ஜாதகங்களுடன் விண்ணப்பித்தனர். இந்நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.