காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தனது சொத்தின் பெரும்பங்கை செலவிட உள்ளதாக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.
124 பில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரரான ஜெப் பெசோஸ் தொண்டு பணிகளுக்கு பணத்தை செலவிடுவதில்லை என விமர்சனங்கள் இருந்து வந்த நிலையில், முதல் முறையாக தனது சொத்தின் பெரும்பகுதியை தான் உயிரோடு இருக்கும்போதே நன்கொடையாக வழங்க உள்ளதாக அவர் மனம் திறந்துள்ளார்.
சமூக ஏற்றத் தாழ்வுகளை கலைத்து, மனித குலத்தில் ஒற்றுமையை நிலைநாட்ட பாடுபடுபவர்களுக்கும் ஆதரவளிக்க போவதாக அவர் தெரிவித்துள்ளார்.