கேரள மாநிலம் திரூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த இளம்பெண்ணை ரயில்வே பாதுகாப்பு காவலர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றினார்.
சொர்ணூரில் இருந்து கண்ணூருக்கு சென்ற திமோத்தி ரயில் அதிகாலை 5.30 மணியளவில் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியது. அப்போது தந்தை மற்றும் மகள் ஓடும் ரயிலில் ஏற முயன்றனர்.
தந்தை ரயிலில் ஏறிய நிலையில், பின்னால் ஓடி வந்த மகள் படிக்கட்டில் கால் தவறி கீழே பிளாட்பாரத்தில் விழுந்தார்.
இதனால் தண்டவாளத்துக்கு இடையே சிக்கி கொள்ளும் அபாயம் இருந்த நிலையில் அங்கிருந்த ரயில்வே காவலர் விரைந்து செயல்பட்டு இளம் பெண்ணை காப்பாற்றினார்.