திருப்பதி மலையில் தேவஸ்தான அனுமதியில்லாமல் போட்டோ எடுக்கும் தொழில் செய்து வந்த 30க்கும் மேற்பட்ட போட்டோகிராபர்களின் கேமராக்களை, தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் பறிமுதல் செய்து, உண்டியலில் சமர்ப்பித்தனர்.
போட்டோ கிராபர்கள் பக்தர்களுக்கு தொல்லை கொடுப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏழுமலையான் உண்டியலில் சமர்ப்பிக்கப்படும் பொருள், தேவஸ்தானத்திற்கே சொந்தமாகும் என்பதால், ஏலத்தின் மூலம் மட்டுமே கேமராக்களை திரும்ப பெற முடியும்.