பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில், சமூக நீதிக்கு எதிராக திமுக செயல்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சி கூட்டம் என்ற நாடகத்தில் நடிகர்களாக பங்கேற்க தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு விருப்பமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை கருத்தில் கொண்டு 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டை பாரதிய ஜனதா கட்சி எடுத்தது.
10 சதவிகித இடஒதுக்கீட்டில் பிராமணர்கள் உள்ளிட்ட 79 சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுவார்கள் என்று குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, இதற்கு ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.