முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டிருக்கும் குற்றவாளிகள், நிரபராதிகள் என்பதற்காக நீதிமன்றம் விடுதலை செய்யவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 6 பேருக்கும், பேரறிவாளன் தீர்ப்பு பொருந்தும் என கூறி அனைவரையும் விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை, பா.ஜ.க. புரிந்துகொள்கிறது என்றும், காங்கிரஸ் கட்சிக்கு தேசிய ஒருமைப்பாட்டை விட தமிழகத்தில் தேர்தல் வெற்றிகள் முக்கியமாகிவிட்டது என்றும் சாடினார்.