ஜப்பானில் நடைபெற்ற WRC கார் பந்தயத்தின்போது ஒரு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
ஸ்பெயினை சேர்ந்த டானி சோர்டோ சென்ற ஹூண்டாய் i20 கார் இருபுறமும் மரங்கள் சூழ்ந்த சாலையில் சென்றுகொண்டிருந்தபோது தீப்பிடித்தது.
கார் தீப்பிடித்து எரிவதை கண்டதும் டானி சோர்டோவின் பின்னால் வந்த Gus Greensmith தனது காரை நிறுத்தினார்.
டானி சோர்டோவும் அவரருடன் வந்த இணை ஓட்டுனரான கேண்டிடோ கரேராவும் தீயை கட்டுப்படுத்த முயன்றும் கார் முற்றிலும் எரிந்தது. இந்த விபத்தில் டானி சோர்டோவுக்கும் அவருடன் இருந்த இணை ஓட்டுனரும் காயங்கள் இன்றி தப்பினர்.