ட்விட்டர் நிறுவனத்தின் ப்ளூ டிக் அடையாள சேவை இந்தியாவில் தொடங்கியுள்ளது. மாதம்தோறும் 719 ரூபாய் சந்தா செலுத்தி ப்ளூ டிக் அடையாளத்தை பெற விண்ணப்பிக்கலாம் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
தொழிலதிபர் எலன் மஸ்க் டிவிட்டரின் உரிமைகளை வாங்கிய பின்னர் அமெரிக்காவில் எட்டு டாலர் செலுத்தி ப்ளு டிக் அடையாளத்தைப் பெறலாம் என்று அறிவிப்பு வெளியானது.
தற்போது இந்த சேவை ஐபோன்களில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் இது அனைவருக்கும் கிடைக்கும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.