குஜராத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு 160 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டதில் ஜடேஜாவின் மனைவி ரிவபா, ஹர்திக் பட்டேல் ஆகியோருக்கு சீட் ஒதுக்கி உள்ளது. முதல்வர் பூபேந்திர பட்டேல் கேட்லோடியா தொகுதியில் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது.