சென்னையில், மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி சிக்கிய இளைஞரிடம், அபராதம் செலுத்திய பிறகும் ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போக்குவரத்து ஆய்வாளர், காவல் கட்டுப்பாட்டறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று, அசோக் நகரில் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரின் வாகனத்தை பறிமுதல் செய்து, போக்குவரத்து போலீசார் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
அதன்படி, அந்த இளைஞர் அபராதம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தமக்கு 5,000 ரூபாய் தரவில்லை என்றால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்துவிடுதாகக் கூறி போக்குவரத்து ஆய்வாளர் நாகராஜ் பேரம் பேசி, ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.