புயல் வந்தாலும், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
வால்டாக்ஸ் சாலையில் இலவச மருத்துவ முகாமை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, சென்னையில் வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க, போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.