பெங்களூரு அருகே தேர்வில் காப்பி அடித்ததை கண்டுபிடித்து ஆசிரியர் திட்டியதால் மனவேதனை அடைந்து, அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து குதித்து 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
சொக்கனஹல்வியைச் சேர்ந்த முகமது நூரின் மகனான மோகின், நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள குடியிருப்பின் 14-வது மாடிக்கு சென்ற குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கீழே குதித்தபோது தடுப்புசுவரை பிடித்தபடி தொங்கிய மோகின், நீண்ட நேரம் தொங்க முடியாதால் கைநழுவி விழுந்தார்.
போலீசார் விசாரணையில், தேர்வில் காப்பி அடித்ததை கண்டுபிடித்து திட்டி ஆசிரியர் வெளியே அனுப்பியதும், இதனால் அவர் மனவேதனையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.