பொருளாதார சீர்திருத்தங்களுக்காக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நாடு கடன்பட்டுள்ளதாக, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
டாக்ஸ் இந்தியா ஆன்லைன் நிறுவன விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய அவர், மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள், தாராளமய பொருளாதாரத்திற்கு வழிவகுத்ததாக கூறினார்.
மன்மோகன் சிங்கின் சீர்திருத்தங்களால், மகாராஷ்டிராவில் தான் அமைச்சராக இருந்தபோது, சாலைகள் அமைக்க நிதி திரட்ட முடிந்தது என்பதையும் அமைச்சர் நிதின்கட்கரி நினைவு கூர்ந்தார்.
பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த, இந்தியாவுக்கு அதிக முதலீடு தேவைப்படும் என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.