ஹிமாச்சல் பிரதேசத்தில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்தை பொதுமக்களுடன் இணைந்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நகர்த்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அம்மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், பிலாஸ்பூர் நகரில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது, குறுகலான சாலை ஒன்றில் பேருந்து ஒன்று பழுதாகி நின்று நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீர்செய்ய மக்கள் முயன்று கொண்டிருந்த போது, காரில் இருந்து இறங்கிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தானும் பேருந்தை தள்ளி மக்களுக்கு உதவினார்.
போக்குவரத்து நெரிசல் சீரான பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டார்.