ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தும்படியும் ,வாகனப் போக்குவரத்தைக் கண்காணிக்க கட்டுப்பாடு அறை அமைக்கவும் அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்புலன்சுகளை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. சாலைப் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அரசு சார்பில் பதில் தாக்கல் செய்ய 3 வாரம் அவகாசம் அளித்து இது தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.