புதுச்சேரியில் அதி நவீனமாக கட்டப்பட்ட வீட்டின் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று வெண்கலச் சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.
ஆரோவில்லில் ஜெர்மன் நாட்டினருக்கு சொந்தமான வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நடராஜ், அம்மன், சந்திரசேகரர் ஆகிய மூன்று சிலைகளும் சோழர் காலத்தை சேர்ந்தவை ஆகும். அந்த வீட்டில் வசிக்கும் ஜெர்மன் நாட்டு தம்பதியான பாப்போ பிங்கல், மோனா ஆகியோரிடம் இதற்கான ஆவணங்கள் இல்லை.
மேலும் இந்த தம்பதியினர் ஜெர்மனி நாட்டிற்கு சிலைகளை கடத்தினார்களா என்பது பற்றியும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..