சென்னை பட்டினப்பாக்கத்தில் பேக்கரி ஒன்றில், கெட்டுப்போன கேக் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 5ம் தேதி சௌமியா என்ற அந்த பேக்கரியில், அதே பகுதியைச்சேர்ந்த நபர், வாழைப்பழ கேக் வாங்கியுள்ளார். வீட்டுக்கு சென்று பார்த்தபோது அது கெட்டுப்போய் இருந்ததாக கூறி, மாற்றிக்கொடுக்க கேட்கும்போது, ஊழியர்கள் மீண்டும் கெட்டுப்போன கேக்கையே வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த வாடிக்கையாளர், பேக்கரி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அனைத்து கேக்குகளும் கெட்டுப்போய் இருப்பதாக கூறி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.