புதுச்சேரி நகரப் பகுதியில் போதை ஆசாமி ஒருவரால் அரைமணி நேரம் மின்சாரம் தடை ஏற்பட்டது. புதுச்சேரி தமிழ்ச்சங்கம் சாலையில் உள்ள வெங்கட்டா துணை மின் நிலையத்தின் மதில் சுவர் மீது போதையில் மர்ம நபர் ஒருவர் ஏறி உள்ளார்.
இதனை பார்த்த மின் ஊழியர் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி விட்டு அந்த நபரை பிடிக்க செல்வதற்குள் தப்பி ஓடி விட்டார். இதனைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்ட மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது .
இதுதொடர்பாக மின்சாரதுறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.