வெனிசுலா கடற்படையினரால் மீட்கப்பட்ட கடற்பசு ஒன்று, பராரிடா உயிரியல் பூங்காவில் விடப்பட்டுள்ளது.
பிரேசிலில் இருந்து திசை மாறி சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் நீந்தி வெனிசுலா கடற்கரைக்கு வந்தடைந்த இந்த கடற்பசுவை, இரு மாதங்களுக்கு முன் கடற்படையினர் மீட்டனர்.
மார்கரிடா தீவில் பராமரிக்கப்பட்டு வந்த கடற்பசு தற்போது, கடற்பசுக்களின் இனப்பெருக்கம் மற்றும் பராமரிப்பில் நிபுணத்துவம் பெற்ற பராரிடா பூங்காவில் விடப்பட்டுள்ளது. இந்த கடற்பசுவுக்கு டிகோ என பெயரிடப்பட்டுள்ளது.