சென்னையில் வரும் ஜனவரி மாதத்தில் இரண்டாம் கட்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்க உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பருவக்கால மருத்துவ முகாமை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சென்னையில் பெருமழை வந்தால் மக்கள் பாதிக்காமல் இருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.