வெள்ள நீர் தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால், சென்னை மாநகரம் 98 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை முழுவதும் 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
பட்டாளம் பகுதியில் நடைபெறும் முகாமை துவக்கி வைத்த பின் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மழைக்காலத்தில் வீட்டின் உரிமையாளர்கள் கட்டிடம் சார்ந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.