செங்கல்பட்டு அருகே விபத்தில் காயமுற்று சாலையோரம் கிடந்த நபருக்கு முதலுதவி அளித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
புதுச்சேரியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி ஒருவர் காயமடைந்து இருந்ததை கண்டார்.
உடனடியாக காரில் இருந்து இறங்கிய ஆளுநர், அவருக்கு முதலுதவி அளித்தார்.
இதனை தொடர்ந்து, 108 ஆம்புலன்சிற்கு தகவல் அளித்து, அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.