புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பிரதமர் மோடி குறித்த 'மோடி அட் 20 : டிரீம்ஸ் மீட் டெலிவரி' என்ற புத்தக கருத்தரங்க நிகழ்ச்சியில் எல்.முருகன் பங்கேற்றார்.
அதில் பேசிய அவர், மருத்துவம், பொறியியல், சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே படிக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுத்துள்ளதாக கூறினார்.