சென்னையில் சங்கிலி, செல்போன் பறிப்பு குற்றவாளிகள், வீடு புகுந்து திருடுவோருக்கு எதிரான ஒரு நாள் சிறப்புத் தணிக்கையில் 562 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிரான அந்நடவடிக்கையில் கைதானவர்களில் 15 பேரிடம் திருந்தி வாழ்வதற்காக நன்னடத்தை உறுதிமொழி பிணைப் பத்திரம் பெற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.