டிவிட்டர் நிறுவனம் அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்யத்துவங்கிய நிலையில், அந்நிறுவன ஊழியர்கள் டிவிட்டரில் பணி இழப்பு குறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
எலான் மஸ்க் டிவிட்டரை கையகப்படுத்தியது முதல் செலவுகளை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் ஒருபகுதியாக, நேற்று டிவிட்டர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், அனைவரும் வீடு திரும்ப அறிவுறுத்தியிருந்தது.
பணியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கும், பணி நீக்கம் செய்யப்படாதவர்களுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மின்னஞ்சல் அனுப்பப்படும் என்றும் குறிப்பிட்டது.
மேலும் டிவிட்டர் அமைப்பு, வாடிக்கையாளர் தகவல்களை பாதுகாக்க, அந்நிறுவனத்தின் அலுவலகங்களை தற்காலிகமாக மூடுவதாகவும் தெரிவித்துள்ளது.