வணிக அடிப்படையிலான பால் விலை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது, பொதுமக்கள் பயன்படுத்தும் பால் விலை மாற்றப்படவில்லை என பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் அறிவித்தது போல பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் முதலமைச்சர் குறைத்ததாகவும், அந்நிலையே என்றும் நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.
வணிக அடிப்படையிலான ஆரஞ்சு நிற பால் விலையை மட்டுமே அரசு உயர்த்தியிருப்பதாகவும், மற்ற நிற பால் பாக்கெட்டுகளின் விலையை அரசு ஒருபோதும் உயர்த்தாது, என்றும் அவர்கூறினார்.