சென்னை மண்ணடியில் உள்ள நேஷனல் மருத்துவமனையில், முறையான சிகிச்சை அளிக்காமல் கடந்த 15 நாட்களில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராயபுரம் பகுதியை சேர்ந்த அப்துல் அமீது அப்பாஸ் என்ற 24 வயது இளைஞர், வயிற்றுவலி காரணமாக, அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் டெங்கு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தொண்டை பகுதியில் துளையிட்டு மேல்சிகிச்சை அளித்ததால், அப்பாஸ் உடல்நிலை மேலும் மோசமானதையடுத்து, வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதையடுத்து, ஆம்புலன்ஸில் மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே, அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அதே மருத்துவமனையில் வயிற்றுவலிக்காக அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்ததால், சிறுமியின் உறவினர்கள் மருத்துவனையை முற்றுகையிட்டனர்.
இதனை அறிந்த அப்பாசின் தந்தை அமானுல்லா இந்த இரு மரணங்களின் பின்னணி குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தார். மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்க மறுத்து விட்டனர்