புளூ டிக் பெற்றுள்ள ட்விட்டர் பயனாளர்களிடம் மாதக் கட்டணமாக 8 டாலர் வசூலிக்கப்படும் என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கடந்த வாரம் வாங்கினார்.
ட்விட்டரை வாங்கியது முதல் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வரும் எலான் மஸ்க், ட்விட்டரின் வணிகத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் பயனர்களுக்கு பதில்கள் மற்றும் தேடலில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், அதிக நேரங்கள் கொண்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவிடும் வசதியும், பாதி விளம்பரங்கள் மட்டுமே இருக்கும் வசதியும் வழங்கப்படும் எனவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.