சென்னை வியாசர்பாடியில் மின்சாரம் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவத்தில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பி.வி காலனி 25-ஆவது தெருவை சேர்ந்தவர் தேவந்திரன். ஆட்டோ ஓட்டுனரான இவர், தனது வாடகை ஆட்டோவை புளியந்தோப்பில் விட்டுவிட்டு 18-ஆவது தெரு வழியாக மழைநீரில் வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது, அங்கிருந்த சாமியானா பந்தல் கம்பியை பிடித்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த எம்.கே.பி.நகர் போலீசார், சாமியானா பந்தல் தொழிலாளி உட்பட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.