சென்னை பட்டாளம் டிமலஸ் சாலையில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டதால் அதிகளவில் மழை நீர் தேங்கும் அசோக்நகர், கொளத்தூர் போன்ற பகுதிகளில் தற்போது மழை நீர் தேங்கவில்லை என்று தெரிவித்தார்.
தொடர் மழையால் தாழ்வான சில பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.