பிரேசில் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியா லுலா ட சில்வா வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய அதிபர் போல்சனாரோவை தோற்கடித்து லுலா ட சில்வா 3-ஆவது முறையாக பிரேசில் நாட்டின் அதிபராக வெற்றி பெற்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோயாஸ் உட்பட 16 மாகாணங்களில் உள்ள நெடுஞ்சாலைகளின் இருபுறம் வாகனங்களால் ஆக்கிரமித்து தேர்தலில் தோல்வியடைந்த போல்சனாரோ ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.