தமிழக - கேரள எல்லையான பாறசாலையில் கல்லூரி மாணவன் கொலை தொடர்பாக காதலி கைதான நிலையில், அவரது தாயார் மற்றும் உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கல்லூரி இறுதியாண்டு மாணவரான சாரோன் ராஜிற்கு, கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது விசாரணையில் உறுதியானதையடுத்து, காதலி கிரிஷ்மா கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான தடயங்களை அழித்ததாக கிரிஷ்மாவின் தாயார் சிந்து மற்றும் உறவினர் நிர்மல் குமாரையும் போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக, கிரிஷ்மாவிடம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டபோது, கழிவறைக்கு பயன்படுத்தும் கிருமி நாசினியை குடித்து, அவர் தற்கொலைக்கு முயன்றார்.
இதனையடுத்து பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக சுமா, காயத்ரி ஆகிய பெண் போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.