சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், துணிக்கடை உரிமையாளரிடம் மாமுல் கேட்டு மிரட்டியதாக சிசிடிவி காட்சிகளுடன் ரவுடி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பழைய வண்ணாரப் பேட்டையை சேர்ந்த ரமேஷ், MC ரோடு பகுதியில் துணிக் கடை நடத்தி வருகிறார்.
நேற்றிரவு அவரது கடைக்கு வந்த ரவுடி கல்லறை சுரேஷ் உட்பட 5 பேர், மாதம் 20,000 ரூபாய் மாமுல் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தர ரமேஷ் மறுப்பு தெரிவித்ததால், எரித்து கொலை செய்துவிடுவேன் என கல்லறை சுரேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவான நிலையில் புகாரின் பேரில் இராயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.