அடுத்த மாதம் 8-ந் தேதி ஏற்படும் முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. உலகின் பல பகுதிகளில் கடந்த 25-ந் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது.
இந்நிலையில், நடப்பு ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நவம்பர் 8-ந் தேதி நிகழவுள்ளது.இந்த முழு சந்திர கிரகணத்தை கொல்கத்தா உள்பட நாட்டின் கிழக்கு பகுதிகளில் பார்க்க முடியும்.
எஞ்சிய பகுதிகளில், பகுதி சந்திர கிரகணத்தை மட்டுமே பார்க்க முடியும். இந்திய நேரப்படி பிற்பகல் 2:48 தொடங்கும் சந்திர கிரணம் மாலை 6:19 மணிக்கு முடிவடையும்.