தடை செய்யப்பட்ட சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய இரண்டு பேரை ஜம்முகாஷ்மீர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
ஐரோப்பிய தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அவர்கள் காஷ்மீருக்குள் ஆயுதங்களைக் கடத்துவதில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
டிரோன்கள் மூலம் ஆயுதங்களை தீவிரவாதிகளுக்கு விநியோகிக்கும் வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினர் சம்ஷேர் சிங் மற்றும் சந்திரபோஸ் ஆகிய இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.