கிழக்கு லடாக் எல்லையை ஒட்டிய சாலைகளை சீன ராணுவம் செம்மைப்படுத்தி வருகிறது. ஏராளமான முகாம்களும் டெண்டுகளும் அங்கு போடப்பட்டுள்ளன.
அசல் எல்லைக் கோடு பகுதியில் பனிக்காலம் தொடங்கும் நிலையில் பான் காங் சோ ஏரியின் தென்கரையில் தன் உள்கட்டமைப்பு சாலைகளைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளது.
சாலை விரிவாக்கப்பணிகளால் கனரக ராணுவத் தளவாடங்கள் ஏற்றிச்செல்ல வசதியாக சாலைகள் விரிவுபடுத்தப்படுகின்றன. இதனிடையே படைக்குறைப்பு தொடர்பாக 17 சுற்று பேச்சுவார்த்தை நடத்திய இந்திய -சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் எஞ்சிய பகுதிகளில் படைக்குறைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரைவில் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.