பத்துலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து குஜராத்தில் காந்தி நகரில் நடைபெற்ற ரோஜ்கார் மேளா நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் உரை நிகழ்த்திய மோடி, கடந்த தன்தேரஸ் சுபதினத்தில் 75 ஆயிரம் பேருக்கு அரசு வேலைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இது போல் அனைத்து மாநிலங்களிலும் ரோஜ்கார் மேளாக்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்