அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி கணவரை சுத்தியலால் தாக்கிய நபரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள வீட்டில் திடீரென புகுந்த அந்த நபர், நான்சி பெலோசி எங்கே என்று கேட்டபடி அங்கிருந்த 82 வயதாகும் பால் பெலோசியின் தலையில் சுத்தியலால் தாக்கியுள்ளார்.
இதில் அவரது மண்டை உடைந்ததோடு, தடுத்தபோது வலது பக்க கையிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி, 42 வயதான டேவிட் தேபாபே என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.